செய்திகள் :

``அமித் ஷாவின் கருத்தை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கிறார்களா?'' - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

post image

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." எனக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தேசியளவில் விவாதமான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கெஜ்ரிவால்

காங்கிரஸ் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், ``பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எதுவும் செய்யவில்லை" எனக் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். பல்வேறு மாநிலக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து வருக்கிறனர்.

இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் எக்ஸ் பக்கத்தில், ``அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளான, ஆந்திராவின் தெலுங்கு தேசக கட்சியும், ஜே.டி(யு) வின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். அமித் ஷாவின் பாபா சாகேப் அவமதிப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Ambedkar: ``எந்த இந்தியரும் சகித்துக் கொள்ளமாட்டார்.." - அமித் ஷாவுக்கு கமல்ஹாசன் பதில்!

அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது என மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக எத... மேலும் பார்க்க

``குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?'' -அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் கேள்வி!

திரைப்பட இயக்குநர் பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடுவதையும், அவரது அடுத்த படைப்பான 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இணைத்து பெரும் விழாவாக நேற்று சென்னையில் கொண்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?

Doctor Vikatan: என்உறவினருக்கு 70 வயதாகிறது. மூட்டுவலிக்காகஅவர் முழங்கால்களில் அணியக்கூடிய பேண்டு (knee caps) உபயோகிக்கிறார். எனக்கும் சமீப காலமாக மூட்டுகளில் வலியை உணர்கிறேன். நானும் அந்த முழங்கால் ப... மேலும் பார்க்க

Ambedkar: ``டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்..!" - பட்டியலிடும் பிரதமர் மோடி

அமித் ஷாபேச்சுநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸைச் சாடியிருப்பது தற்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.நேற்று நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க

``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு!

நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்தது. அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ``அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமை... மேலும் பார்க்க