செய்திகள் :

Ambedkar: ``எந்த இந்தியரும் சகித்துக் கொள்ளமாட்டார்.." - அமித் ஷாவுக்கு கமல்ஹாசன் பதில்!

post image

அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது என மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

விஜய்

நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழக்கத்தைன் தலைவர் விஜய், ``  எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்." எனக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,``நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார். அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ளமாட்டார்.

கமல் ஹாசன்

நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75-ம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``அமித் ஷாவின் கருத்தை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கிறார்களா?'' - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்ப... மேலும் பார்க்க

``குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?'' -அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் கேள்வி!

திரைப்பட இயக்குநர் பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடுவதையும், அவரது அடுத்த படைப்பான 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இணைத்து பெரும் விழாவாக நேற்று சென்னையில் கொண்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?

Doctor Vikatan: என்உறவினருக்கு 70 வயதாகிறது. மூட்டுவலிக்காகஅவர் முழங்கால்களில் அணியக்கூடிய பேண்டு (knee caps) உபயோகிக்கிறார். எனக்கும் சமீப காலமாக மூட்டுகளில் வலியை உணர்கிறேன். நானும் அந்த முழங்கால் ப... மேலும் பார்க்க

Ambedkar: ``டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்..!" - பட்டியலிடும் பிரதமர் மோடி

அமித் ஷாபேச்சுநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸைச் சாடியிருப்பது தற்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.நேற்று நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க

``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு!

நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்தது. அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ``அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமை... மேலும் பார்க்க