செய்திகள் :

மன நிம்மதியாக இருக்கிறது..! ஓய்வு குறித்து அஸ்வின் பேட்டி!

post image

ஓய்வை அறிவித்தது மன நிம்மதியாக இருப்பதாக அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.18) அறிவித்தாா்.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியிலிருக்கும் அவா், கிரிக்கெட் உலகமும், ரசிகா்களும் எதிா்பாராத இந்த முடிவை, தொடரின் இடையே அறிவித்திருக்கிறாா். ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளில் அவா் தொடா்ந்து விளையாடவுள்ளாா்.

தற்போது, சென்னை வந்தடைந்த அஸ்வின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அதில் அஸ்வின் பேசியதாவது:

இங்கு வந்திருக்கும் பலரை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். எனக்காக வந்தவர்களுக்கு நன்றி. இவ்வளவு பேர் வருவார்கள் என நினைக்கவே இல்லை. கடைசியாக 2011இல் உலகக் கோப்பை முடித்துவிட்டு வரும்போது இப்படி இருந்தது.

டெஸ்ட் போட்டி முடித்துவிட்டு வரும்போது இவ்வளவு பேர் வந்தது மகிழ்ச்சி. இந்தநாளை என்னுடைய நாளாக மாற்றியதுக்கு நன்றி.

ஓய்வு அறிவித்தது கவலையளிக்கவில்லை. தனிப்பட்ட விதத்தில் மனநிம்மதியாகவும் திருப்தியாகவும் இருக்கின்றன.

இது என்னுடைய மனதில் நீண்ட நாள்களாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென டெஸ்ட்டின் நான்காவது நாள் தோன்றியது. 5ஆவது நாள் அறிவித்துவிட்டேன்.

கடைசி 2 வருடங்களாக நான் விக்கெட் எடுத்தது நினைவுக்கு வருவதில்லை. எனக்கு சிறிதும் கவலையே இல்லை.

என்னால் முடிந்த அளவுக்கு சிஎஸ்கே அணியுடன் விளையாடுவேன். இந்திய கிரிக்கெட்டராகத்தான் அஸ்வின் ஓய்வு, கிரிக்கெட்டராக இல்லை என்றார்.

பிபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி!

பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி முதல்முறையாக பிபிஎல் (வங்கதேச பிரீமியர் லீக்) தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஃபார்ட்யூன் பரிஷல் அணி... மேலும் பார்க்க

கேசவ் மகராஜ் விலகல்: தெ.ஆ.வுக்கு பின்னடைவு!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ் காயத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ... மேலும் பார்க்க

கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!

விஜய் ஹசாரே டிராபிக்கான கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.விஜய் ஹசாரே தொடர் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த அணிகள் தங்களது வீரர்கள் குறித்த அணி விவரத்தை அ... மேலும் பார்க்க

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது. இந்த விடியோவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பயிற்சியாளர் சோகம் தேசாய், பகுத்தாய்வாளர் ஹரி பிர... மேலும் பார்க்க

ஆப்கன் தொடர்: டாஸ் வென்று ஜிம்பாப்வே பந்துவீச்சு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிக... மேலும் பார்க்க

அஸ்வினை அண்ணா என்றழைத்த ஜடேஜா!

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அஸ்வினை அண்ணா என்று பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓ... மேலும் பார்க்க