திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தா...
Siragadikka aasai : முத்துவின் பெண் வெர்ஷன் தான் ஸ்ருதி; விஜயாவிற்கு வந்த சோதனை!
சிறகடிக்க ஆசையில் கடந்த இரண்டு எபிசோட் முழுக்க மனோஜ் வாங்கப் போவதாக நம்பிக் கொண்டிருக்கும் வீட்டில் ரகளையாக கடந்தது. முத்து, ஸ்ருதி மாற்றி மாற்றி விஜயாவுக்கு பல்ப் கொடுத்தனர்.
முத்து எப்படி மனதில் சரி என்று பட்டதைப் பேசுவாரோ, ஸ்ருதி கதாபாத்திரமும் அப்படித்தான். விஜயா பேசுவது தவறு என்று தெரிந்தும் ரவி, மீனா, அண்ணாமலை உள்ளிட்டோர் அமைதியாகத்தான் இருப்பார்கள் அல்லது மெல்லிய எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் ஸ்ருதி, முத்து முகத்திற்கு நேராக தட்டிக் கேட்பார்கள். விஜயாவும் அமைதியாகி விடுவார். குறிப்பாக விஜயா மீனாவை அவமானப்படுத்தும் போதெல்லாம், முத்து எப்படி குரல் கொடுப்பாரோ, ஸ்ருதியும் அப்படித்தான்.
முத்து, ஸ்ருதியை போன்ற கேரக்டர்கள் நம் வாழ்க்கையிலும் இருந்தால் அது வரம். புது வீட்டில் மீனாவை காஃபி போடச் சொல்லி விஜயா விரட்ட, ஸ்ருதி அந்த பால் கெட்டு போயிருக்கு, நான் ஆர்டர் பண்றேன் என்று சொல்லி விஜயாவை ஆஃப் செய்கிறார்.
மற்றொரு சந்தர்பத்தில் விஜயா மனோஜின் வீட்டைப் பற்றி பெருமை பேசிக் கொண்டே ஸ்ருதியைச் சீண்டுவார். ஸ்ருதி இது மாதிரி எங்க அச்சாக் கிட்ட ரெண்டு பீச் ஹவுஸ் இருக்கு என்று சொல்லி மூக்குடைப்பார். விஜயா அமைதியாகச் சென்றுவிடுவார்.
வீட்டை விற்றதாகச் சொல்லி ஒரு பெரிய தொகையைச் சுருட்டிக் கொண்டு இரண்டு நபர்கள் ஒடிவிட்ட நிலையில், மனோஜ் வீட்டிற்குப் பெயர் வைக்க வேண்டும் என்று நியுமராலஜிஸ்ட்டை வரவழைத்தது பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது.
நியுமராலஜிஸ்ட் முதலில் ரோஜா என்று சொல்ல, மீனா பூ விற்பதால் இது அவரோடு தொடர்புடையது என்று சொல்லி அந்த பெயரை நிராகரிக்கிறார். அடுத்ததாக ஒரு வித்தியாசமான பெயரை அந்த நபர் பரிந்துரைக்கிறார். ரோகிணி, மனோஜ், விஜயா ஆகிய பெயர்களில் இருந்து எழுத்துக்களை எடுத்து `ரோமயா’ என்று பெயர் வைக்கிறார். விஜயா மகிழ்ச்சியாகி அந்த பெயரைச் சொல்லிப் பார்த்தது சிரிக்க வைத்தது.
வாஸ்து பார்த்து பெயர் வைக்கும் படலம் முடிந்தது. அடுத்ததாக வீட்டில் பேய் ஏதும் இருக்கிறதா என்ற பயத்தை பார்வதி கிளப்புகிறார். மனோஜின் நண்பர் உடனடியாக ஒரு தீர்வு சொல்லி பேய் பிடிக்கும் பெண் மந்திரவாதியை அழைத்து வருகிறார். அந்த பெண் பயங்கரமான கெட்டப்பில் பேய் பிடிக்க வருகிறார். அவரை பார்க்க அசல் மந்திரவாதி போலவே இருக்கிறார். விஜயா பார்த்து பதறுகிறார்.
முட்டை மந்திரம், பரிகாரம், வாஸ்து பெயர், பேய் என மக்கள் இன்றைய நவீன காலக்கட்டத்திலும் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதை இந்த காட்சிகள் பிரதிபலிக்கின்றன.
வாஸ்து பார்த்து பெயர் வைத்தவர் ஒரு பெரிய தொகையை கேட்டு வாங்கிச் செல்ல, அடுத்து பேய் பிடிக்க வந்திருக்கும் பெண்ணும் பெரியத் தொகையைக் கேட்பார்.
மனோஜ், ரோகிணின்னு எங்கிருந்து தான் பணம் வருகிறதோ. அள்ளி அள்ளி கொடுத்து ஏமாறுகின்றனர். அடுத்து வரும் எபிசோடில் அந்த பீச் ஹவுஸில் பேய் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். மேலும் அந்த காட்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.