இந்திய சிறையிலிருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பியோட்டம்!
BB Tamil 8: அன்ஷிதா, பவித்ராவிடம் மல்லுகட்டும் மஞ்சரி, ஜாக்குலின் - சூடுபிடிக்கும் ஆட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 74-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி வருகிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். அதில் ஜெஃப்ரியும் பவித்ராவும் இணைந்து தங்களுக்கான கற்களைக் காப்பாற்றும்போது ராணவ் அதைத்தடுத்தார்.
அப்போது ராணவை ஜெஃப்ரி தள்ளிவிட அவருக்குத் தோள்பட்டையில் அடிபட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார். அதன் பிறகு பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த டாஸ்க்கில் மோதல்கள் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில், டாஸ்க்கில் அன்ஷிதா, பவித்ரா இருவரிடமும் மஞ்சரி, ஜாக்குலின் சேர்ந்து மல்லுக்கட்டுகிறார்கள். 'ஏன் ஒரு பொம்மைக்கு ஒட்டுமொத்தமா வர்றீங்க நீங்க பண்றதெல்லாம் கரெக்ட்டா' என்று பவித்ரா கத்துகிறார்.
அதை கொடுத்துரு பவி என்று அன்ஷிதா கோபத்தில் சொல்ல பவித்ரா அந்த பொம்மையை தூக்கி எறிந்து விட்டார். போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது.