செய்திகள் :

ஜமைக்கா துப்பாக்கிச்சூடு: `அவனும் போயிட்டான்; என்ன செய்வது?’ - கலங்கும் நெல்லை இளைஞரின் குடும்பம்

post image

ஜமைக்கா நாட்டின் பிராவிடன்ஸ் தீவில் உள்ள லீ ஹை ரோடு என்ற இடத்தில் ஜேகே புட் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. அதன் உரிமையாளராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் உள்ளார். அந்தக் கடையில் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய நான்கு பேர் பணியாற்றி வருகிறார்கள்.

பட்டப்படிப்பு முடித்த விக்னேஷ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜமைக்காவில் பணியில் சேர்ந்துள்ளார். அவரது குடும்பம் ஏழ்மையானது என்பதால் அங்கு பணியாற்றிக் கிடைக்கும் பணத்தை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து உதவியாக இருந்துள்ளார். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

விக்னேஷ் வேலை பார்த்துவந்த கடைக்குள் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நுழைந்த இரு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் விக்னேஷூக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றிய மேலும் இருவருக்கு வயிறு கால்களில் குண்டு பாய்ந்துள்ளது. அந்த மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்து பொருள்களை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த விக்னேஷ் கழுத்தில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்த தகவல் குடும்பத்தினருக்கு நேற்று காலையில் தெரியவந்ததும் பதறித் தவித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் விக்னேஷ் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் செய்வது அறியாமல் தவித்த அவர்களுக்கு பாளையங்கோட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த விக்னேஷ் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவ வேண்டும் என அவர்களிடம் குடும்பத்தினர் வலியுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு பட்டப் படிப்பு கொண்டு வர வேண்டும் என்று விக்னேஷின் உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதன் பின்னர் பேசிய அவரது சகோதரி கல்பனா, “எங்கள் குடும்பம் மிகவும் வறுமையானது. என் தயார் பீடி சுற்றியே எங்களை காப்பாற்றி வருகிறார். குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்ட என் தம்பி விக்னேஷ், பட்டப் படிப்புக்கு பின்னர் ஜமைக்கா நாட்டு வேலைக்கு போய்விட்டான். இப்போது அவனும் இறந்துவிட்டதால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறோம்” என்று கதறினார்.

இதனிடையே, ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் துப்பாக்கியுடன் நுழையும் இரு மர்ம நபர்கள் கடைக்குள் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அப்போது கடை ஊழியர்கள்: அதைத் தடுப்பதைக் கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடுகின்றனர். அதில் பணியாளர்களுக்கு காயம் ஏற்படுகிறது.

காலில் ஏற்பட்ட காயத்துடன் துடித்தபடியே விக்னேஷ் கிடக்கிறார். அப்போது அங்கிருந்து தப்பிச் செல்லும் கொள்ளையன் அவரது கழுத்தில் சுடுகிறார். உடனடியாக அவர் அப்படியே தரையில் சரியும் காட்சி வெளியாகி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினரும் உறவினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

`வரி ஏய்ப்பு செய்ததாக லஞ்சம்' - ஜி.எஸ்.டி துணை ஆணையர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி, மதுரை மத்திய ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர்கள் அ... மேலும் பார்க்க

சென்னை: வாடகைத் தாயாக இருக்க போலியான தகவல்; காட்டிக் கொடுத்த குழந்தை - இருவர் கைதான பின்னணி

சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் மெடிக்கல் அதிகாரியாக பணியாற்றுபவர் மீனாட்சி சுந்தரி. இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``கடந்த 16.12.2024-ம் தேதி டி.எம்.எஸ் வளாகத்தில... மேலும் பார்க்க

சென்னை: மறுமண ஆசையைக் காண்பித்து பண மோசடி - கோவை இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான், மறுமணம் செய்ய முடிவு செய்து த... மேலும் பார்க்க

மும்பை: கணவனை ஜாமீனில் எடுக்க, ஒரு மாத மகளை விற்க முயன்ற தாய் - 9 பேர் கைது

மும்பையில் அடிக்கடி குழந்தைகள் கடத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.சமீபத்தில் மும்பை தாதர் திலக் மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தன் குழ... மேலும் பார்க்க

பெண்டிங் வழக்குகள்: சிறையில் இருந்து தப்பிச்சென்ற டிரக் டீலர் - 22 ஆண்டுகள் ஆச்சு... என்ன நிலவரம்?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழ... மேலும் பார்க்க

பிரேத பரிசோதனையில் உயிருடன் எடுக்கப்பட்ட கோழி; அதிர்ந்த மருத்துவர்கள்... அமானுஷ்ய சடங்கால் சோகம்!

சத்திஸ்கர் மாநிலத்தில் கோழியை உயிருடன் விழுங்க முயற்சித்த நபர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் அவர் விழுங்க முயற்சி செய்த கோழியை மீட்டுள்... மேலும் பார்க்க