Squid Game: 'ஸ்குவிட் கேம் சீசன் 3' - அப்டேட் கொடுத்த நடிகர் லீ ஜங் ஜே
தங்கம் பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 56,560-க்கு விற்பனையாகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க | மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(டிச.19) கிராமுக்கு ரூ. 65 குறைந்து ரூ.7,070-க்கும், பவுனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 56,560-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.