செய்திகள் :

லாரி - ஆட்டோ ரிக்சா மோதியதில் 5 பேர் பலி, 5 பேர் காயம்

post image

ஷாஜஹான்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் பகுதியில் லாரியும் ஆட்டோ ரிக்சாவும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர் என்று உ.பி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கூறுகையில், "ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் பகுதியில் லாரியும் ஆட்டோ ரிக்சாவும் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும் லாரியில் இருந்த பத்து பேரில் ஐந்து பேர் காயமடைந்னர்.

லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். "இரண்டு குழந்தைகளுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் பட்சத்தில் உயர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று எஸ்பி கூறினார்.

இதையும் படிக்க |வேலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் பட்டதாரி பெண் பலி

மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று கஸ்கஞ்சியில் இருந்து புதன்கிழமை திருமண விழாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 26 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார் கார்கே!

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 மு... மேலும் பார்க்க

நீல நிற உடையில் ராகுல், பிரியங்கா போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேக்தர் சிலை முன்பு ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று அம்பேத்கரை அவமதித்ததாக எத... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்... மேலும் பார்க்க

தென்னிந்திய மாநிலங்களில் அதிகரித்த சிசேரியன் அறுவைசிகிச்சை! முதலிடத்தில்..

நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகமாக நடப்பதாகவும் முதலிடத்தில் தெலங்கானா இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

ராகுல் காந்தி தள்ளியதால் தலையில் காயம்: பாஜக எம்பி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் தனது தலையில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி வியாழக்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமித் ஷா பேசி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்ட எச்சரிக்கை!

எங்கும் மோசடி, எதிலும் மோசடி என்ற அளவில் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் நடக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அதுபோன்ற எச்சரிக்க... மேலும் பார்க்க