நந்தா இல்லையென்றால் நான் இல்லை: சூர்யா
இயக்குநர் பாலாவின் வெள்ளிவிழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வு நேற்று (டிச. 18) சென்னையில் நடைபெற்றது.
இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: எங்கள் கனவு நாயகன் ஆசிர்வதித்தபோது... விஜய் புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
நிகழ்வில் பேசிய சூர்யா, “சேது படத்தைப் பார்த்து அதிலிருந்து வெளிவர 100 நாள்கள் ஆனது. அப்படி ஒரு படத்திற்குப் பின் பாலாவின் அடுத்த படத்தின் நாயகனாக நான் இருப்பேன் என நினைத்துகூட பார்க்கவில்லை. நந்தா என்னை சரியாக அடையாளப்படுத்திய படம். அது கிடைக்கவில்லை என்றால், காக்க காக்க, வாரணம் ஆயிரம் என எதுவும் இருந்திருக்காது. என்னை தமிழ் சினிமாவில் பெரிதாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாவுக்கு நன்றி.
உறவுகளுக்கு மதிப்பளிக்கக்கூடியவர் பாலா. அண்ணா என்று நான் சொல்வது வெறும் வார்த்தை அல்ல, அது உணர்வு. எப்போதும் நிரந்தரமாக இருக்கின்ற அண்ணன் - தம்பி உறவைக் கொடுத்ததற்கு என் நன்றிகள்” எனத் தெரிவித்தார்.