ஆடுகளத்தைவிட கடினமான படம் விடுதலை: வெற்றி மாறன்
இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை - 2 திரைப்படம் நாளை (டிச. 20) திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற வெற்றி மாறனிடம், ‘நீங்கள் இயக்கிய படங்களிலேயே கடினமான உழைப்பைக் கோரிய படம் எது?’ எனக் கேட்கப்பட்டது.
இதையும் படிக்க: நந்தா இல்லையென்றால் நான் இல்லை: சூர்யா
அதற்கு வெற்றி மாறன், “நான் இயக்கியதிலேயே ஆடுகளம்தான் கடினமான படமாக இருந்தது. ஆனால், விடுதலை - 1 மற்றும் விடுதலை - 2 படங்கள் அதைவிட கடினமாக அமைந்துவிட்டது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அதிக உழைப்பை எடுத்துக்கொண்ட படமாக விடுதலை உருவாகியிருக்கிறது.” என்றார்.
விடுதலை - 1 மற்றும் இரண்டு பாகங்களுக்கு 260 நாள் படப்பிடிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.