வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்ட எச்சரிக்கை!
எங்கும் மோசடி, எதிலும் மோசடி என்ற அளவில் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் நடக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அதுபோன்ற எச்சரிக்கையை ஜிமெயில் வெளியிட்டிருக்கிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், ஜிமெயில் பயனாளர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்புவிக்க சில வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி அது குறித்து பயனர்களுக்கு விழிப்புணர்வையும் ஜிமெயில் ஏற்படுத்தியிருக்கிறது.