செய்திகள் :

மருத்துவமனை ஆக்ஸிஜன் பைப் திருட்டு; மூச்சுத்திணறி உயிரிழந்த 12 குழந்தைகள் - ம.பி-யில் அதிர்ச்சி!

post image

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் NICU (குழந்தை பராமரிப்பு பிரிவு) மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குழந்தைகள் திடீரென அழத் தொடங்கின. உடனே செவிலியர்களும், மருத்துவர்களும் குழந்தைகளை சோதித்திருக்கின்றனர். இதற்கிடையில், ஒவ்வொரு குழந்தையாக மரணிக்கத் தொடங்கின.

ஆக்ஸிஜன் பைப்

செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மருத்து நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜம்போ சிலிண்டரிலிருந்து உடனடியாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டது. அதன் பிறகே, குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்காகப் பொருத்தப்பட்ட குழாய்கள் திருடப்பட்டிருப்பதும், அதனால், ஆக்ஸிஜன் தடைப்பட்டதும் தெரியவந்தது.

இந்த மோசமான சம்பவத்தில் 12 குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக ராஜ்கர் மாவட்ட மருத்துவமனை அதிகாரி, ``புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் தாமிரத்தாலான ஆக்ஸிஜன் பைப்லைனை திருடர்கள் வெட்டி திருடியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு புதிய கட்டடத்தில் இது போன்று நடந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

பட்டதாரி பெண்ணை வேட்டையாடிய சிறுத்தை - உடலை வாங்க மறுத்து போராட்டம்... வன கிராம மக்கள் சொல்வதென்ன?

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகிலுள்ள துருவம் கிராமத்தின் வனப்பகுதியையொட்டி வசித்து வந்த அஞ்சலி என்கிற பட்டதாரி இளம் பெண்ணை, நேற்று (டிசம்பர்-18) மாலை சிறுத்தை ஒன்று கொடூரமாக கடித்துக் கொன்றது.அந்... மேலும் பார்க்க

Ambedkar : அமித் ஷா சர்ச்சைப் பேச்சு; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - பதறுகிறதா பாஜக?

`கற்பி... ஒன்றுசேர்... புரட்சி செய்..!' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்தது மட்டுமல்லாமல், அதன் வழி வாழ்ந்து காட்டியவர் சட்ட மாமேதை அம்பேத்கர். அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், இந்திய மக்கள் ... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதியை நிறுத்திய ஓமன்; பாதிக்கப்படும் தமிழக கோழிப்பண்ணை தொழிலாளர்கள்!

இந்திய கோழி முட்டைகளின் இறக்குமதிக்கான அனுமதியை ஓமன் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தை சார்ந்த கோழி வளர்ப்போர் வெகுவாக பாதித்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் 50 சத... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கடித்துக் கொன்ற சிறுத்தை - பீதியில் உறைந்த வேலூர் வன கிராமம்!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த துருவம் கிராமத்தின் வனப்பகுதியையொட்டி உள்ள தனது விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 5... மேலும் பார்க்க

சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படும் ஏலகிரி மலை - மக்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா அரசு?

திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து, மிகவும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. இந்தக் குப்பைக் கூளங்களை அதிகாரிகள் கடந்த சில வருடங்கள... மேலும் பார்க்க

தமிழ்நாடு: `ஐ.பி.எஸ் அதிகாரி'களான 26 எஸ்.பி-க்கள் - நியமன உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு!

தமிழக காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள் எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஐ.... மேலும் பார்க்க