செய்திகள் :

சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படும் ஏலகிரி மலை - மக்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா அரசு?

post image

திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து, மிகவும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. இந்தக் குப்பைக் கூளங்களை அதிகாரிகள் கடந்த சில வருடங்களாகவே பல முறை பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தைச் சூழ்ந்து வெறும் 500.மீ தொலைவில் அரசினர்‌ ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி, நீர் ஓடை அமைந்துள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மூக்கைப் பிடித்தபடி செல்வதையும் பார்க்க முடிகிறது.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர், ``நான் இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தான் வேலை செய்து கொண்டு வருகிறேன். நானே இந்த விவகாரம் குறித்துத் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளிடமும் ஊர்த்‌ தலைவரிடமும் பல தடவை பேசியுள்ளேன். இதோ கவனிக்கிறோம், உடனே‌ நடவடிக்கை எடுத்து விரைந்து சரி செய்வோம் என்று கூறுவார்கள். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நிகழாமல் இதே சூழலே நிலவிக் காணப்படுகிறது. அவர்கள் செய்வது ஒன்றுதான், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் இயந்திரங்களின் உதவியுடன் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். சிறிதளவுக் குப்பைகள் இருந்தால்கூட பரவாயில்லை... மலைபோல் குவிந்துள்ளது. அது மக்குவதற்குள் அப்படியே இன்னொரு லோடு கொட்டுவார்கள்.

அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாள்களில் மூன்று முதல் ஐந்து டிராக்டர் குப்பைகளை இங்கு வந்து கொட்டி விட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களுக்கு என்ன... எங்கிருந்தோ வருகிறார்கள், கொட்டி விட்டுச் செல்கிறார்கள். பாதிக்கப்படுவது நாங்கள்தான். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், `எங்களுக்கு உடலுக்கு எதோ பிரச்னை'ன்னு தான் உங்ககிட்ட மருத்துவமனைக்கு வர்றோம். ஆனா இந்த துர்நாற்றத்தால் எங்களுக்கு எதாவது புது வியாதி வந்துரும்போல' என்று நாளும் அச்சப்படுகின்றனர்.

இது குறித்து பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில், ``வகுப்பறையினுள் உட்காரவே முடியவில்லை. இதுபோல இருந்தால் நாங்கள் எப்படி பாடம் கவனிப்பது, சில நேரங்களில் விளையாடுதற்குக் கூட வெளியே வரமாட்டோம். சொல்ல வேண்டும் என்றால் ஒழுங்கா சாப்பிடக்கூட முடிவதில்லை. எங்கள் தலைமை ஆசிரியரும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உள்ளார். ஆனால், அதிகாரிகளோ அலட்சியமாக இருக்கின்றனர்" என்றார்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, ``பெரிய பெரிய உணவகங்கள், தொழிற்சாலையில் இருக்கும் பேட்டரி, பிளாஸ்டிக், பிராய்லர் கழிவுகள் போன்ற பல்வேறு தேவையற்ற பொருள்களை இங்கே வந்து கொட்டி விட்டுச் செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் குப்பைகள் மண்ணுக்குள் மூழ்கி அப்படியே ஊருவதால், நாங்கள் குடிக்கும் தண்ணிரில் கலந்து வருகிறதோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் தரப்பில் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்லும்போது குப்பைகளைக் கொட்ட மாற்று இடம் ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். மீண்டும் இந்த இடத்துப் பக்கமே திரும்பவில்லை" என்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் இரண்டு முறை விளக்கம் கேட்கச் சென்றிருந்தோம். நகராட்சி அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. ஒருவரை ஒருவர் கைகாட்டி நழுவினர்.

இது மழைக்காலம்... சுகாதாரம் பேணுவதில் அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

இளம்பெண்ணை கடித்துக் கொன்ற சிறுத்தை - பீதியில் உறைந்த வேலூர் வன கிராமம்!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த துருவம் கிராமத்தின் வனப்பகுதியையொட்டி உள்ள தனது விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 5... மேலும் பார்க்க

தமிழ்நாடு: `ஐ.பி.எஸ் அதிகாரி'களான 26 எஸ்.பி-க்கள் - நியமன உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு!

தமிழக காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள் எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஐ.... மேலும் பார்க்க

தூத்துக்குடி: T.சவேரியார்புரத்தில் தேங்கும் குப்பைகள்... சுகாதார பாதிப்புகளைத் தடுக்குமா மாநகராட்சி?

தூத்துக்குடி மாவட்டம், T. சவேரியார்புரம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைந்திருக்கிறது. அதன் பின்புறம் பிரதான சாலைக்கு அருகே குடியிருப்புகளையொட்டி ஆங்காங்கே குவிந்து கிடைக்கும் குப்பைகளால் அந்த இ... மேலும் பார்க்க

CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' - தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி 'நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருத... மேலும் பார்க்க

Trump: ``இந்தியா அதிக வரி விதிக்கிறது; நாங்களும் அப்படிச் செய்தால்..." - இந்தியாவை சாடிய டிரம்ப்!

வரும் ஜனவரி மாதம், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவரிடம் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க

Pan 2.0 - `பழைய பான் கார்டை கட்டாயமாக மாற்ற அவசியமில்லை' - என்ன சொல்கிறது அரசு?!

ஒரு திட்டம் புதியதாக வந்தால், உடனே அது சம்பந்தமான மோசடியும் முளைத்து விடுவது லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது. பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள், அத... மேலும் பார்க்க