செய்திகள் :

பாக்.பாதுகாப்பு படையினரால் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

post image

பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தரப்பில் கூறப்பட்டதாவது, டிச.17 மற்றும் 18 ஆகிய இரு நாள்களில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளினால் மொத்தம் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் முதலில் டேங்க் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையினால் அங்கு 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையும் படிக்க: காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் 2 பேரும், மொஹமந்து மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களில்தான் பயங்கரவாத செயல்களினால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் புதிய மற்றும் முட... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வலியுறுத்தியும் பைக் டாக்சி விவகாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்... மேலும் பார்க்க

புதிய தொடரில் இருந்து விலகிய கண்மணி மனோகரன்!

புதிய தொடரான ராகவி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கவு... மேலும் பார்க்க

பூடானில் இந்திய கல்வியாளருக்கு ராஜ மரியாதை!

பூடான் நாட்டில் இந்திய கல்வியாளர் அருண் கபூருக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பூடான் மற்றும் ஒமன் ஆகிய நாடுகளில் கல்வி நிலையங்களை நிறுவிய இந்தியாவைச் சேர்ந்த புக... மேலும் பார்க்க

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க