செய்திகள் :

மும்பை படகு விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதய் சமந்த்

post image

நாக்பூர் (மகாராஷ்டிரம்): மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், முழுமையாக விசாரணை செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாழக்கிழமை மகாராஷ்டிரம் மாநில அமைச்சர் உதய் சமந்த் கூறினார்.

‘நீல்கமல்’ எனும் சுற்றுலா பயணிகள் படகு 20 குழந்தைகள் உட்பட சுமார் 110 பயணிகள் மற்றும் 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகிலுள்ள பிரபல சுற்றுலாத் தளமான ‘எலிபெண்டா’ தீவுகளுக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது, பயணிகள் படகு அருகே வட்டமிட்டு கொண்டிருந்த இந்திய கடற்படையைச் சோ்ந்து அதிவேகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் நீல்கமல் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் பொதுமக்கள், நான்கு பேர் கடற்படை வீரர்கள். படுகாயமடைந்த ஒருவர் கடற்படை கப்பல்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடுக்கடலில் சிக்கித் தவித்தவர்களில் இதுவரை 101 போ் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் நடவடிக்கையால் மீட்கப்பட்டனா்.

11 கடற்படை படகுகள், மூன்று கடல்சாா் காவல் படகுகள், ஒரு கடலோர காவல்படை படகு மற்றும் நான்கு ஹெலிகாப்டா்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதியளித்தார்.

இந்த நிலையில், மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், முழுமையான விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாழக்கிழமை மகாராஷ்டிரம் மாநில அமைச்சர் உதய் சமந்த் கூறினார்.

இதையும் படிக்க |லாரி - ஆட்டோ ரிக்சா மோதியதில் 5 பேர் பலி, 5 பேர் காயம்

இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“இதுபோன்ற விபத்துகள் மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்துக்கான காரணங்கள் குறித்து புதன்கிழமை முதல்வர் பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அரசு கவனித்துக்கொள்ளும். காயமடைந்தவர்களுக்கு அரசு உதவி செய்யும்.

இது விபத்துதான். மேலும் இது அரசியலாக்கக் கூடாது. ஏற்கனவே பல விதிகள் மற்றும் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், மனிதப் பிழை இருந்தால், அதையும் கவனித்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

மேலும் விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் ஆர்வகோளாறில் யாராவது வேகமாக படகை ஓட்டியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமந்த் கூறினார்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய தொடரில் இருந்து விலகிய கண்மணி மனோகரன்!

புதிய தொடரான ராகவி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கவு... மேலும் பார்க்க

பூடானில் இந்திய கல்வியாளருக்கு ராஜ மரியாதை!

பூடான் நாட்டில் இந்திய கல்வியாளர் அருண் கபூருக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பூடான் மற்றும் ஒமன் ஆகிய நாடுகளில் கல்வி நிலையங்களை நிறுவிய இந்தியாவைச் சேர்ந்த புக... மேலும் பார்க்க

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.முதல்வர் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்டப் பாலங்கள்: முதல்வர் உத்தரவு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில்34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்குமு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலைய... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட 2 தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தகர்ப்பு!

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட 2 தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.மணிப்பூர் மாநிலத்தின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் தடைச் செய்யப்பட்ட 2 தீவிரவாத அமைப்புகளின் முகாம்களை பாதுகாப்புப் படையினர் கண... மேலும் பார்க்க

பாக்.பாதுகாப்பு படையினரால் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் ர... மேலும் பார்க்க