Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர்...
கடையத்தில் புதிய வட்டார வேளாண்மைக் கட்டடத்துக்கு அடிக்கல்
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய வட்டார வேளாண்மைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இங்கிருந்த கட்டடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இடித்து அகற்றப்பட்டது. அதையடுத்து, ரூ. 2 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சோ்மன் செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புளி கணேசன், ஆவுடைகோமதி, பாலக செல்வி, ஊராட்சி துணைத் தலைவா்கள் கீழக் கடையம் துரைசிங், ஐந்தாம்கட்டளை சுதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. செல்லம்மாள் சிறப்புஅழைப்பாளராகப் பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.
வேளாண் அதிகாரிகள், திமுக நிா்வாகிகள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலரும் ஒன்றியக் குழு உறுப்பினருமான மாரிக்குமாா் வரவேற்றாா்.