செய்திகள் :

Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

post image
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.

அஷ்வினின் இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், அஷ்வினின் ஓய்வு முடிவு குறித்து பேசியிருக்கிறார்.  இது குறித்து பேசிய அவர், "இந்தத் தொடர் முடிந்த பிறகு இந்திய அணிக்காக விளையாட இருக்க மாட்டேன் என்று அஷ்வின் ஓய்வு முடிவை கூறியிருக்கலாம்.

அஷ்வின்

2014 –15 ஆம் ஆண்டு  ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியில் தோனி செய்ததை போலவே அவரும் செய்திருக்கிறார்.  தேர்வாளர்கள் காரணங்களை வைத்து பல்வேறு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏதேனும் ஒரு வீரர் காயமடைந்தால் மற்ற வீரர் விளையாட வேண்டும். குறிப்பாக சிட்னி மைதானம் ஸ்பின்னர்களுக்கு நிறைய உதவி செய்யும்.

அதனால் இந்தப் போட்டியில் அஷ்வின் விளையாடக்கூடும். ஆனால் அவர் வாய்ப்பை தற்போது தவற விட்டிருக்கிறார். பொதுவாக நீங்கள் இது போன்ற முடிவை தொடரின் இறுதியில் அறிவிக்க வேண்டும்.

சுனில் கவாஸ்கர்

பாதியில் அறிவிப்பது சரியானதல்ல. அஷ்வின் நாளை வீடு திரும்புவதாக ரோஹித் சொன்னார். எனவே சர்வதேச வீரராக அஷ்வினின் வாழ்க்கை முடிந்திருக்கிறது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம்" என்று கூறியிருக்கிறார்.

Ashwin: 'எனக்கு வருத்தமெல்லாம் இல்லை, ஆனால்..!' - ஓய்வு குறித்து சென்னையில் அஷ்வின் ஓப்பன் டாக்

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்த ஓய... மேலும் பார்க்க

Ashwin: `சுயமரியாதைமிக்க தமிழக வீரன்' - இந்திய அணியில் அஷ்வின் எப்படி சாதித்தார்?

2008 ஆம் ஆண்டு. ஐ.பி.எல் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதல் சீசனுக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.சென்னை அணியும் அப்போது உள்ளூர் அளவில் சிறப்பாக ... மேலும் பார்க்க

Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.* கிரிக்கெட் பழகிக் கொண்... மேலும் பார்க்க

Ashwin: ``அவங்க அப்பா எல்லா மேட்ச்சும் பாக்க வருவார்" - அஷ்வின் குறித்து நெகிழும் TNCA பழனி

இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அஷ்வினை சிறுவயதிலிருந்தே பார்த்து வரும் அவரது கிரிக்கெட் கரியரில் முக்கியப் பங்க... மேலும் பார்க்க

Ashwin : ஓய்வு முடிவு; எமோஷ்னல் அஷ்வின், ஹக் கொடுத்த கோலி - நெகிழ்ச்சி தருணங்கள் | Video

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இர... மேலும் பார்க்க

Ashwin: `நான் தேவையில்லையெனில் ஓய்வு பெறுகிறேன்'- கறாராகச் சொன்ன அஷ்வின்; எப்போது எடுத்த முடிவு?

இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்ததற்கான காரணம் என்னவென இந்திய அணியின் கேப்டன் ர... மேலும் பார்க்க