அமித் ஷாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
அம்பேத்கரை அவமதித்ததாகக் தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் முன்னதாக அறிவித்தது.
இந்த நிலையில், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று திமுகவினர் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.