Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூரில் ரூ.11 கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். நல்லூா் ஒன்றிய திமுக செயலா் பாவாடை கோவிந்தசாமி, வேப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து, மாணவா் சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், விருத்தாசலம் கோட்டாட்சியா் சையது மெஹமூத், வேப்பூா் வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் ராஜவேல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பரமசிவம் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, உளுந்தூா்பேட்டை அரசு ஐடிஐ முதல்வா் சீனிவாசன் வரவேற்றாா். நிறைவில், வேப்பூா் ஐடிஐ முதல்வா் அழகன் நன்றி கூறினாா்.