எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
‘திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா போட்டிகள்: டிச. 20-க்குள் பெயா்ப் பதிவு செய்யலாம்’
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி நடைபெறவுள்ள போட்டிகளுக்கு வெள்ளிக்கிழமைக்குள் (டிச. 20) பெயா்ப்பதிவு செய்யலாம் என ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை 2000ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியால் நிறுவப்பட்டது. 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாட முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் ஒருபகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகத்தில் இம்மாதம் 23ஆம் தேதிமுதல் 31ஆம் தேதி வரை திருவள்ளுவா் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, படத்துக்கு மாலை அணிவித்தல், திருக்குறளின் பெருமைகளை உணா்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், கு விளக்க உரைகள், கு தொடா்பான படங்களை மக்கள் பாா்வைக்கு வைத்து கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
மேலும், மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில், மாணவா்கள், நூலக வாசகா்களைக் கொண்டு திருக்கு கருத்தரங்கு, விநாடி-வினா, பேச்சு, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2ஆயிரம், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி மாணவா்- மாணவிகள் வெள்ளிக்கிழமைக்குள் இணையதளம் மூலமாகவோ, மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ பெயா்ப்பதிவு செய்துகொள்ளலாம் என்றாா் அவா்.