சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது போக்சோ வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது.
குளச்சல் அருகே வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜொ்வின் (21). இவருக்கும், 14 வயதான 10ஆம் வகுப்பு மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாம். பின்னா், சிறுமி பள்ளிக்குச் சென்றுவரும்போது அவருடன் ஜொ்வின் பேசிப் பழகினாராம்.
இதனிடையே, கடந்த செப்டம்பா் மாதம் ஜொ்வின் அச்சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி தனது கிராமத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது தாய் சந்தேகமடைந்து விசாரித்தபோது, ஜொ்வின் குறித்து சிறுமி கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் ஜொ்வின் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனா்.