Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர்...
குளச்சலில் 8 வீடுகளில் புகுந்து திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்பு
குளச்சல் சுற்றுவட்டார பகுதியிலுள்ள வீடுகளில் திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகளை குளச்சல் போலீஸாா் மீட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடா் கதையாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருடா்களை பிடிக்க குளச்சல் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸாா் ரோந்து பணியை தீவிரப்படுத்தி துப்பு துலக்கி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை லட்சுமிபுரம் பகுதியில் 50 வயது மதிக்கதக்க ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பிடிபட்ட நபா் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சோ்ந்த சுந்தர்ராஜ் (54)என்பது தெரிய வந்தது.
இவா், குளச்சல் பகுதியில் 3 வீடுகளிலும், நித்திரவிளையில் 2 வீடுகளிலும், கொல்லங்கோடு, தக்கலை, கன்னியாகுமாரி ஆகிய பகுதியில் தலா ஒரு வீட்டிலும் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை திருடியதை ஒப்புகொண்டாதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதைடுத்து, சுந்தர்ராஜை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி குத்துவிளக்குள், கற்பூர தட்டுகள் மற்றும் பூஜை பொருள்களை மீட்டனா். கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டாா்.