Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்
நமது சிறப்பு நிருபர்
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பது:
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து தான் பேசியது என்ன என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை அமித்ஷா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அம்பேத்கரின் மரணத்துக்குப் பின்னரும் கூட அவருக்கு பாரத ரத்னா தர மறுத்தது காங்கிரஸ். ஆனால், 1955-ஆம் ஆண்டு நேரு தமக்கு தாமே பாரத ரத்னா விருது பெற்றுக் கொன்டார். 1971-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தமக்கு தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார்.
1990-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத காலத்தில், பாஜக ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்த போதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் மீதான நேருவின் வெறுப்பை நாடு நன்கு அறியும் என்று கூறியுள்ளார்.