எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த 40 பைக்குகள் மீட்பு
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள பூங்காவில் நிறுத்தப்பட்ட 40 பைக்குகளை எடுத்துச் சென்ற வடபாகம் போலீஸாா், அவற்றை ஏலம் விட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள பூங்காவின் அருகே புறக்காவல் நிலையம் இயங்கி வந்தது. அப்போது, விதிமீறல் காரணங்களுக்காக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள், பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அந்த புறக்காவல் நிலையம் செயல்படாத நிலையில், பல மாதங்கள் ஆகியும் பூங்காவில் நிறுத்தப்பட்ட பைக்குகளுக்கு யாரும் உரிமை கோரவோ அல்லது முறையாக பெற்றுச் செல்லவோ முன்வரவில்லையாம்.
இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 40 பைக்குகளை வடபாகம் காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். இந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.