சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
சாத்தான்குளம், முதலூா் பகுதியில் தீவிர நோய் தடுப்புப் பணிகள்
மழை வெள்ளத்தால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சாத்தான்குளம் வட்டாரத்தில் சுகாதாரத் துறையினா் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஜெயபால், மந்திரராஜன் தலைமையிலான குழுவினா் தினமும் குடிநீரில் குளோரின் அளவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். சாத்தான்குளம் வட்டாரத்தில் 30 கொசு ஒழிப்பு பணியாளா்கள் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சேமித்து வைத்திருக்கும் தண்ணீரில் கொசுப் புழுக்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறாா்கள்.
டெங்கு, மலேரியா, எலிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போலையா்புரம், கொழுந்தட்டு, வாலத்தூா் பகுதிகளில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி ஆலோசனையின் பேரில், மருத்துவா் ரெய்ஸா தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்களை புதன்கிழமை நடத்தினா்.
போலையா்புரம் சேகர தலைவா் மணிராஜ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா்.
சித்த மருத்துவ அலுவா் ஜெகதீஷ் தலைமையில் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. ஆசிரியா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா், செவிலியா்கள், ,அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.