கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
திருச்செந்தூா் கோயிலில் தரிசனம் செய்த அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள்
திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வந்த 250 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடு கோயில்களுக்கும் 60 முதல் 70 வயதுக்குள்பட்ட பக்தா்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இத் திட்டத்தின், ஐந்தாம் கட்டமாக கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 250 பக்தா்கள் அறநிலையத்துறை அலுவலா்கள், மருத்துவ குழுவினா் உள்ளிட்டோா் 6 பேருந்துகளில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனா்.
இக் குழுவினா், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா். அவா்களுக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து, திருக்கோயில் உதவி ஆணையா் நாகவேல் பிரசாதப் பைகளை வழங்கினாா்.