செய்திகள் :

கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா

post image

வங்கியில் பெறப்பட்ட கடன் வட்டியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், என்னுடைய சொத்துகளை விற்று ரூ. 14,131 கோடி வசூலித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.

இதனிடையே, அவர் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை துறை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் விஜய் மல்லையாவின் ரூ.14,131.16 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்பட மொத்தமாக ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : விஜய் மல்லையா சொத்துகளை விற்றதில் ரூ. 14,000 கோடி மீட்பு!

இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கிங் ஃபிஷர் ஏர்லைனின் மொத்த கடன் வட்டித் தொகை ரூ. 1,200 கோடியுடன் சேர்த்து ரூ. 6,203 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமலாக்கத்துறையால் எனது சொத்துகள் ரூ. 14,131 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால் நான் இன்னும் பொருளாதாரக் குற்றவாளியாக உள்ளேன். எனது கடன் தொகையைவிட இரு மடங்குக்கு மேல் வசூலிக்கப்பட்டதை அமலாக்கத்துறையும் வங்கியும் நியாயப்படுத்தவில்லை என்றால் நிவாரணம் கேட்க எனக்கு உரிமை உண்டு.

கடன் தொகையைத் தாண்டி என்னிடம் இருந்து ரூ. 8,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. என்னை துஷ்பிரயோகம் செய்பவர்கள் உள்பட யாராவது முன்வந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவார்களா? இழிவுப்படுத்தப்பட்ட என்னை ஆதரிக்க தைரியம் தேவை.

சிபிஐ பதிவு செய்துள்ள குற்ற வழக்குகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும் என்றும் அரசும் என்னை விமர்சிப்பவர்களும் கூறுகிறார்கள். சிபிஐ என்ன வழக்கு பதிவு செய்தது? நான் யாரிடம் இருந்தும் ஒரு ரூபாய்கூட கடனாக பெறவில்லை, திருடவில்லை.

ஆனால், கிங்ஃபிஷர் கடனுக்கு உத்தரவாதம் அளித்தவர் என்ற முறையில் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் உள்பட ரூ.900 கோடி கடனை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு கடனும் வட்டியுடன் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. 9 ஆண்டுகள் கடந்தும் மோசடி செய்ததற்கும், நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதற்கும் உறுதியான ஆதாரம் இல்லாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்... மேலும் பார்க்க

தென்னிந்திய மாநிலங்களில் அதிகரித்த சிசேரியன் அறுவைசிகிச்சை! முதலிடத்தில்..

நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகமாக நடப்பதாகவும் முதலிடத்தில் தெலங்கானா இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

ராகுல் காந்தி தள்ளியதால் தலையில் காயம்: பாஜக எம்பி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் தனது தலையில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி வியாழக்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமித் ஷா பேசி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-ஐத் தொடர்ந்து ஜிமெயில் வெளியிட்ட எச்சரிக்கை!

எங்கும் மோசடி, எதிலும் மோசடி என்ற அளவில் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் நடக்கும் மோசடி குறித்த எச்சரிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அதுபோன்ற எச்சரிக்க... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வாயில் சுவரில் ஏறி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் சுவரின் மீது ஏறி எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை ’ஐசியு’வில் மாந்திரீக சடங்கு!

குஜராத் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாந்திரீக சடங்கு செய்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.நோயால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது வழக்க... மேலும் பார்க்க