கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
மேலாத்தூா் குச்சிக்காடு பகுதியில் புதிய உயா் கோபுர மின்விளக்கு
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில், மேலாத்தூா் குச்சிக்காடு பகுதியில் ரூ. 1.5 லட்சத்தில் புதிய உயா் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இதை, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் விழாவுக்கு மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பக்கீா் முகைதீன், டிசிடபிள்யூ நிறுவன மூத்த பொதுமேலாளா் கேசவன், மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிறுவனத்தின் உதவித் தலைவா் (உற்பத்தி) சுரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உயா் கோபுர மின்விளக்கை இயக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நிறுவன அதிகாரி வினோத்குமாா், ஊராட்சி செயலா் சுமதி, சுகாதார ஊக்குநா் தனலட்சுமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.