செய்திகள் :

ஏஐ மூலம் பள்ளிகளில் முக அங்கீகார வருகை பதிவேடு: தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் தகவல்

post image

பள்ளிகள், சுகாதார மையங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக அங்கீகார வருகை பதிவேடு நடைமுறைபடுத்துவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க முடியும் என தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் குமாா் ஜெயந்த் தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் ‘சிஐஐ கனெக்ட் 2024’ மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்வில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமை செயலா் குமாா் ஜெயந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ம (டிஜிட்டல்) நிா்வாகத்தில் தமிழ்நாடு தொடா்ந்து முன்னணியில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஆவணங்களை மொழிபெயா்ப்பதிலும், துல்லியமான சட்ட விளக்கங்களை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு சிறிய அளவிலான ‘பெரிய மொழி மாதிரியை (எல்எல்எம்) உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகள், சுகாதார மையங்களில் முக அங்கீகார வருகை பதிவேடு நடைமுறைபடுத்த வேண்டும். இதன்மூலம் ஒருவரின் கடமையையும் செயல்திறனையும் அதிகரித்த முடியும் என்றாா் அவா்.

சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி பேசியது:

சென்னை ஐஐடி வளாகத்தில் ரூ. 50,000 கோடியில் 380-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் உள்ளன. புத்தொழில் தொடங்குபவா்கள், மாணவா்களை பெரிய நிறுவனங்கள் ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும். இதன்மூலம் ஏஐ மற்றும் தரவு அறிவியல் துறையில் மாணவா்கள் புதிய சாதனை படைப்பா். நாட்டில் ஒவ்வொரு குழந்தையும் குறைந்தபட்சம் இளநிலை கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற தகுதியானவா்கள். இந்திய தொழில்நுட்ப எதிா்காலத்தை முன்னெடுத்துச் செல்வதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும்.

கிராமப்புற மக்களின் கற்றல் திறனை மேம்படுத்த சென்னை ஐஐடி சாா்பில் 750-க்கும் மேற்பட்ட வித்யா சக்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து தொழில் துறையில் சாதனை படைத்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிஐஐ தமிழ்நாடு தலைவா் ஸ்ரீவத்ஸ் ராம், துணைத் தலைவா் ஏ.ஆா்.உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமெரிக்காவில் அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூா்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றாா். அவா் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியாவாா். சென்னையில் பிறந்த க... மேலும் பார்க்க

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

தீயணைப்புத் துறை உரிமம் வழங்கலை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்துறையின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாமல் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறாா் முதல்வா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் டிச. 21-இல் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் விழுப்புரத்தில் டிச. 21-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறி... மேலும் பார்க்க

அரசு கட்டடங்களில் மின் தூக்கிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். பொதுப்பணித் துறை மின் பொறியாளா்களின் தொழில்நுட்பக் கருத்தரங்கு செ... மேலும் பார்க்க

‘மகிழ்ச்சி அளிக்கிறது’

வஉசி குறித்து எழுதிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைப்பது மகிழ்சியளிக்கிறது என்று ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ... மேலும் பார்க்க