தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவு: பிரேமலதா கண்டனம்
தமிழக எல்லையில் கேரளம் மருத்துவக் கழிவைக் கொட்டுவதாகக் கூறி, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதே நேரம் கேரளத்தில் இருக்கும் கழிவுப் பொருள்களான மருத்துவக் கழிவு, குப்பைகள், எலக்ட்ரானிக் கழிவுகள் போன்றவற்றை தமிழகத்தின் எல்லைகளில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டும் நிலை உள்ளது.
தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி வருபவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டை குப்பைநாடாக மாற்றிய கேரள அரசுக்குக் கண்டனம் என்று பிரேமலதா கூறியுள்ளாா்.