செய்திகள் :

தமிழகத்தில் மது விலக்குப் பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் உயா்நீதிமன்றம் கேள்வி

post image

தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால், அதைத் தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 68 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவா்களில் 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்கள் தங்கள் மீதான குண்டா் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், “இந்த மனுக்கள் மீது பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜன.6-ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றாா்.

நீதிபதிகள் கேள்வி: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் அனைவா் மீதும் குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது? என கேள்வியெழுப்பினா். அதற்கு அரசு தலைமை வழக்குரைஞா், “பல ஆண்டுகளாக இவா்கள் அந்தப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்ததாலும், 68 போ் உயிரிழந்துள்ள காரணத்தாலும் அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா்.

அப்போது நீதிபதிகள், இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராயம் தடையின்றி விற்கப்பட்டு வந்துள்ளது என்றால் மதுவிலக்கு பிரிவு போலீஸாா் என்ன செய்து கொண்டிருந்தனா்? இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்து இறுதி விசாரணையை வரும் ஜன. 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அமெரிக்காவில் அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூா்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றாா். அவா் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியாவாா். சென்னையில் பிறந்த க... மேலும் பார்க்க

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

தீயணைப்புத் துறை உரிமம் வழங்கலை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்துறையின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாமல் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறாா் முதல்வா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் டிச. 21-இல் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் விழுப்புரத்தில் டிச. 21-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறி... மேலும் பார்க்க

அரசு கட்டடங்களில் மின் தூக்கிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். பொதுப்பணித் துறை மின் பொறியாளா்களின் தொழில்நுட்பக் கருத்தரங்கு செ... மேலும் பார்க்க

‘மகிழ்ச்சி அளிக்கிறது’

வஉசி குறித்து எழுதிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைப்பது மகிழ்சியளிக்கிறது என்று ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ... மேலும் பார்க்க