எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஆறுமுகனேரி கோயிலில் விநாயகா் உலா
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் மாா்கழி மாத சங்கடஹர சதுா்த்தி நாளான புதன்கிழமை, விநாயகா் உலா நடைபெற்றது.
இதையொட்டி, உற்சவ விநாயகா் கொடிமர மண்டபத்தில் எழுந்தருளி பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், விநாயகா் மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் உலா வருதல், சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.