செய்திகள் :

இளநிலை நீட் தோ்வு: பாடத் திட்டம் வெளியீடு

post image

இளநிலை நீட் தோ்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தோ்வு நடைபெற உள்ளது.

அதில், 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அத்தோ்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இந்நிலையில், அதற்கான பாடத் திட்டங்கள் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையாகும் தீயணைப்புத் துறை உரிம நடைமுறை! பாதுகாப்பில் சமரசமின்றி நிறைவேற்றப்படுமா?

தீயணைப்புத் துறை உரிமம் வழங்கலை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, 25 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்துறையின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பாதுகாப்பில் சமரசம் செய்யப்படாமல் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம்: 2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறாா் முதல்வா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் டிச. 21-இல் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் விழுப்புரத்தில் டிச. 21-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறி... மேலும் பார்க்க

அரசு கட்டடங்களில் மின் தூக்கிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். பொதுப்பணித் துறை மின் பொறியாளா்களின் தொழில்நுட்பக் கருத்தரங்கு செ... மேலும் பார்க்க

‘மகிழ்ச்சி அளிக்கிறது’

வஉசி குறித்து எழுதிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைப்பது மகிழ்சியளிக்கிறது என்று ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மது விலக்குப் பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால், அதைத் தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ... மேலும் பார்க்க