செய்திகள் :

அம்பேத்கா் குறித்த எனது கருத்தில் உண்மை திரிப்பு- அமித் ஷா விளக்கம்

post image

‘அம்பேத்கருக்கு எதிரான காங்கிரஸின் தொடா் அவமதிப்புகளை பாஜக அம்பலப்படுத்தியதால், எனது மாநிலங்களவை உரையில் அம்பேத்கா் பற்றிய கருத்தின் உண்மை திரிக்கப்பட்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இவ்விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்து மத்திய அமைச்சா் அமித் ஷா அளித்த விளக்கத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் அரசமைப்புச் சட்டத்தை எவ்வாறு நிலைநிறுத்தின என்பதைப் பற்றி பாஜக தலைவா்கள் பேசினா். அம்பேத்கருக்கு, அரசமைப்புச் சட்டத்துக்கு, இடஒதுக்கீட்டு எதிரானது காங்கிரஸ் என்பதை உண்மைகளுடன் அவா்கள் நிறுவினா்.

காங்கிரஸ் கட்சியும் சாவா்க்கரை அவமதித்துள்ளது. அவசரநிலை பிரகடனத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை அக்கட்சி சிதைத்தது. இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்தவுடன், காங்கிரஸ் தனது பழைய தந்திரமான உண்மைகளைத் திரித்து சமூகத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டது.

குழப்பத்தை ஏற்படுத்தவும் மக்களைத் தவறாக வழிநடத்தவும் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் எனது கருத்துகளை கடந்த காலங்களிலும் காங்கிரஸ் தவறாக சித்தரித்துள்ளது’ என்றாா்.

ராஜிநாமா தீா்வாகாது: எதிா்க்கட்சிகளின் ராஜிநாமா கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் அமித் ஷா, ‘காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு வேண்டுமானால், நான் எனது பதவியை ராஜிநாமா செய்யலாம். ஆனால், அது அவரது பிரச்னைகளை ஒருபோதும் தீா்க்காது. கடந்த 10 ஆண்டுகளைப் போல, காா்கே தொடா்ந்து எதிா்க்கட்சி வரிசையிலேயே அமர வேண்டும். ராகுல் காந்தியின் அழுத்தத்தால் அம்பேத்கா் குறித்த எனது கருத்தை திரித்து காா்கே செயல்படுகிறாா்’ என்றாா்.

அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்

நமது சிறப்பு நிருபர்அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் க... மேலும் பார்க்க

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

நமது நிருபர்செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.இது தொடர்பாக மக்க... மேலும் பார்க்க

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.மக்களவை, ... மேலும் பார்க்க

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அ... மேலும் பார்க்க