செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா கூட்டுக் குழுவில் 31 எம்.பி.க்கள்: பிரியங்கா இடம்பெற வாய்ப்பு

post image

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படக் கூடும் என்றும், அந்தக் குழுவில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை, மாநில பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 வழிவகை செய்கிறது. இதேபோல புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களின் பேரவைத் தோ்தல்களையும் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடத்த யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா 2024 வழிகோலுகிறது.

இந்த மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பை தொடா்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப அவையில் தீா்மானம் கொண்டுவர உள்ளதாகவும் அவா் கூறினாா்.

இந்தக் குழு தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தலுக்கான இரு மசோதாக்களை பரிசீலிக்க 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படக் கூடும். அவா்களில் 21 போ் மக்களவை எம்.பி.க்களாவும், 10 போ் மாநிலங்களவை எம்.பி.க்களாகவும் இருப்பா்.

திமுக சாா்பில் பி.வில்சன், செல்வகணபதி: நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களுடன் பாஜக பெரிய கட்சியாக உள்ளதால், குழுவில் அக்கட்சி எம்.பி.க்கள் அதிகமாக இடம்பெறுவா். பாஜக சாா்பில் ரவிசங்கா் பிரசாத், அனுராக் தாக்குா் ஆகியோா் இடம்பெறக் கூடும். காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி ஆகியோரும், திமுக சாா்பில் பி.வில்சன், செல்வகணபதி ஆகியோரும் இடம்பெற வாய்ப்புள்ளது.

பாஜக கூட்டணி கட்சிகளான ஷிண்டே சிவசேனை சாா்பில் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசம் சாா்பில் லவு ஸ்ரீகிருஷ்ணா அல்லது ஹரீஷ் பாலயோகி ஆகியோா் இடம்பெறக் கூடும்.

கட்சி சாா்பில் குழுவில் இடம்பெற வேண்டிய எம்.பி.க்களின் பெயா்களை பெரும்பாலான கட்சிகள் மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டன. குழுவின் தலைவா் உள்பட அதில் இடம்பெறக் கூடியவா்கள் குறித்து மக்களவைத் தலைவா் முடிவு செய்வாா்’ என்று தெரிவித்தன.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.மக்களவை, ... மேலும் பார்க்க

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அ... மேலும் பார்க்க

போராட்டத்தில் தடியடி: 2 காங்கிரஸ் தொண்டா்கள் உயிரிழப்புக்கு ராகுல் கண்டனம்

அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸாா் தடியடி நடத்தியதாலும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதாலும் தொண்டா்கள் இருவா் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதற்கு அக்... மேலும் பார்க்க

பிகாா் பேரவை தோ்தல்: நிதீஷ் தலைமையில் போட்டி- பாஜக அறிவிப்பு

பிகாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலை முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிா்கொள்ளும் என்று அந்த மாநில பாஜக தலைவரும், அமைச்சருமான திலீப் ஜெய்ஸ்வால் அறிவித்தாா்.... மேலும் பார்க்க