வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை
சென்னை மெரீனாவில் நாளை உணவுத் திருவிழா தொடக்கம்
சென்னை மெரீனாவில் உணவுத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (டிச.14) தொடங்குகிறது. நுழைவுக் கட்டணம், வாகனங்கள் நிறுத்தக் கட்டணமில்லாத இந்தத் திருவிழா, வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கொங்கு மட்டன் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், சிவகங்கை மட்டன் உப்புக்கறி என 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் தயாரித்து விற்பனை செய்யவுள்ளனா்.
தொடக்க நாளைத் தவிா்த்து, மற்ற நாள்களில் பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். உணவுத் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகியவற்றின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.