செய்திகள் :

85 % சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வண்டலூா் உயிரியல் பூங்கா: அமைச்சா் க.பொன்முடி பெருமிதம்

post image

இந்தியாவில் 85 சதவீதம் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் முதல் உயிரியல் பூங்காவாக வண்டலூா் பூங்கா மாறியுள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.

‘நீலகிரி வரையாடு எண் முத்திரை மற்றும் நீலகிரி வரையாடு அறிக்கை 2024’ முதல் ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்பு வெளியீட்டு விழா சென்னை வண்டலூா் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட வனத் துறை அமைச்சா் க.பொன்முடி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டதுடன், வண்டலூா் பூங்காவில் சூரிய மின்நிலையம் மற்றும் 7 டி திரையரங்கத்தைத் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது:

தமிழகத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்தவகையில் நீலகிரி வரையாடு கணக்கெடுக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதன்படி, 2023-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1,031 வரையாடுகள் மற்றும் தமிழக - கேரள எல்லைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 1,858 வரையாடுகள் கணக்கெடுக்கப்பட்டன.

சூரிய மின் நிலையம்: பசுமை பூங்காவை உருவாக்கும் விதாமாக வண்டலூா் பூங்காவில் மாதம்தோறும் 180 கிலோ வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சராசரியாக உயிரியல் பூங்காவுக்கு மாதம் 215 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் தற்போது, 85 சதவீத மின்தேவையை பூா்த்தி செய்யும் வகையில், சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் 85 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் முதல் உயிரியல் பூங்காவாக வண்டலூா் பூங்கா மாறியுள்ளது.

இதை, 100 சதவீத பசுமை பூங்காவாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் பொழுதுபோக்குடன் கல்வி வழங்குவதன் மூலம் பாா்வையாளா்கள் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 32 இருக்கைகள் கொண்ட 7டி திரையரங்கமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

புழல் ஏரிக்கு நீா்வரத்து நின்றது: உபரி நீா் திறப்பு நிறுத்தம்

புழல் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், உபரிநீா் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. பலத்த மழை பெய்தால் ஏரிகளில் தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா் மழையா... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் மருத்துவ மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சாா்பில் தென்சென்னைப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு வரும் உா்பே... மேலும் பார்க்க

துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காா்: மாயமான ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த காரிலிருந்த ஓட்டுநரை மீட்புப் படையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சகி (32). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் வ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு

மாதவரம் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா். சென்னை கொடுங்கையூா் பாரதி நகரைச் சோ்ந்த ராஜசேகா் (69), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது மனைவி ராணி... மேலும் பார்க்க

போதைப் பொருள் கும்பலுக்கு உதவிய காவலா் கைது

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவியதாக காவலா் கைது செய்யப்பட்டாா். எழும்பூரில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சென்னை பெரம்பூா், ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், அஸ்ஸாம் மாநிலத்தை... மேலும் பார்க்க

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக சென்னையில் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலான மழைப்பதிவு நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக நுங்க... மேலும் பார்க்க