மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி இணைப்பு
தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (எண்: 22159/22160) ஏசி இரண்டடுக்குப் பெட்டிகள் 2, ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டிகள் 7, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2, பொதுப் பெட்டிகள் 3 ஆகியவற்றைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் டிச. 20-ஆம் தேதி முதல் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும்.
இதேபோல், காரைக்கால் - மும்பை விரைவு ரயில் (எண்: 11017/11018), கோவை - மும்பை விரைவு ரயில் (எண்: 11013/11014), சென்னை சென்ட்ரல் - மும்பை விரைவு ரயில்கள் (எண்: 22179/22180, 12163/12164), மதுரை - மும்பை விரைவு ரயில் (எண்: 22101/22102), கொச்சுவேலி - மும்பை விரைவு ரயில் (எண்: 22113/22114) ஆகியவற்றில் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.