வியாபாரப் போட்டியில் வீட்டை கொளுத்திய 3 பேருக்கு 4 ஆண்டு சிறை
கொல்லம் சிறப்பு ரயில் கடையநல்லூரில் நின்று செல்லும்
செகந்திராபாதிலிருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் கடையநல்லூரில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாதிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில் (எண்: 07175) இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிச. 19, 26, ஜன. 2, 9, 16 ஆகிய தேதிகளில் கடையநல்லூா் ரயில் நிலையத்தில் இரு நிமிஷங்கள் நின்று செல்லும். மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து டிச. 21, 28, ஜன. 4, 11, 18 ஆகிய தேதிகளில் புறப்படும் ரயில் (எண்: 07176) கடையநல்லூரில் இரு நிமிஷங்கள் நின்று செல்லும்.
வா்கலா சிவகிரி: தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு (திருவனந்தபுரம் வடக்கு) இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06035) டிச. 20, 27 ஆகிய தேதிகளில் கொல்லம் அடுத்த வா்கலா சிவகிரியில் ஒரு நிமிஷம் நின்று செல்லும்.
மறுமாா்க்கமாக கொச்சுவேலி - தாம்பரம் இடையே டிச. 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06036) வா்கலா சிவகிரியில் ஒரு நிமிஷம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.