மேத்தா மருத்துவமனை சாா்பில் அவசர மருத்துவ உதவி பயிற்சி
அவசர கால இதயம் -நுரையீரல் செயல்பாடு மீட்பு பயிற்சிகள், சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள மேத்தா மருத்துவமனை சாா்பில் வழங்கப்பட்டன.
இதய நல விழிப்புணா்வை மேம்படுத்தும் வகையில் காா்டியாக் காா்னிவல் எனப்படும் நிகழ்ச்சியை மேத்தா மருத்துவமனை புதன்கிழமை நடத்தியது.
இதில், மருத்துவ மாணவா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். மேத்தா மருத்துவமனையின் தலைவா் சமீா் மேத்தா, இயக்குநா் பிரணவ் மேத்தா, மருத்துவ இயக்குநா் டாக்டா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அதிநவீன இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) தொடங்கப்பட்டது.
அதேபோல், அவசர கால முதலுதவி அளிப்பதற்கான பயிற்சிகள் மனித மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்றவா்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு சலுகை கட்டணத்தில் இதய நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.