தியாகராய நகரில் டிச. 23-இல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்
சென்னை தியாகராய நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் டிச. 23-ஆம் தேதி அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தியாகராய நகா் அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை தியாகராய நகரிலுள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிச. 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு அஞ்சல் சேவைகள் தொடா்பான தங்களது குறைகளுக்கு தீா்வு காணலாம்.
மேலும், வாடிக்கையாளா்கள் தங்களது குறைகளை டிச. 20-ஆம் தேதிக்குள் ‘முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600017’ என்னும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.புகாா்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு என குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், தனியாா் கொரியா்கள் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.