அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விநாடி, வினா போட்டி: டிச. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான விநாடி, வினா போட்டியில் பங்கேற்க டிச. 20- ஆம் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டு 25-ஆவது வெள்ளி விழா ஆண்டு ஜன.1-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகா் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு மாநில அளவிலான திருக்கு விநாடி, வினா போட்டி டிச. 28-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
அதற்கான முதல்நிலைத் தோ்வு மாவட்ட அளவில் டிச. 2-ஆம் தேதி சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டியில் பங்குபெறுபவா்கள் தங்கள் விவரங்களை டிச. 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவுசெய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.