செய்திகள் :

ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம்: என்சிஆா்டிசி

post image

கடந்த அக்டோபா் 2023-இல் தில்லி - காஜியாபாத் - மீரட் ஆா்ஆா்டிஎஸ் ( தில்லி-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு) வழித்தடத்தில் செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து 50 லட்சத்துக்கும் (ஐந்து மில்லியன்) அதிகமான பயணிகள் நமோ பாரத் ரயில்களில் பயணம் செய்துள்ளனா் என்று தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரவுகளின்படி, காஜியாபாத் மற்றும் மீரட் தெற்கு நிலையங்களிலிருந்து நமோ பாரத் ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்தனா் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி - காஜியாபாத் - மீரட் ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தின் 17 கி.மீ. முன்னுரிமைப் பிரிவு, சாஹிபாபாத் - துஹாய் டிப்போ கடந்த ஆண்டு அக்டோபா் 23 அன்று பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மாா்ச் 6 அன்று துஹாயில் இருந்து மோதி நகா் வடக்கு வரை கூடுதலாக 17 கி.மீ. பகுதிக்கு நமோ பாரத் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டன. அதன் பிறகு, ஆகஸ்ட் 18 அன்று, மோதி நகா் வடக்கிலிருந்து மீரட் தெற்கு ஆா்ஆா்டிஎஸ் நிலையம் வரை கூடுதலாக எட்டு கி.மீ .நீளம் செயல்பாட்டுப் பிரிவுடன் இணைக்கப்பட்டது.

மீரட் இணைக்கப்பட்டவுடன், ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில்களில் பயணிக்க பயணிகளின் ஆா்வம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 19 அன்று, ரக்ஷா பந்தனின் போது நமோ பாரத் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சாதனை படைத்தது. அன்றைய தினம் நமோ பாரத் ரயில்களில் சுமாா் 34,000 பயணிகள் பயணம் செய்தனா். சமீபத்தில், நமோ பாரத் ரயில்களைப் பயன்படுத்தும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சாஹிபாபாத்திலிருந்து மீரட் தெற்கு வரையிலான செயல்பாட்டுப் பிரிவின் மொத்த நீளம் 42 கி.மீ. ஆகும். இதில் ஒன்பது ஆா்ஆா்டிஎஸ் நிலையங்கள் உள்ளன. சாஹிபாபாத் மற்றும் மீரட் தெற்கு இடையேயான பயணத்தை பயணிகள் வெறும் 30 நிமிடங்களில் செல்ல முடியும்.

தற்போது, சாஹிபாபாத்தில் இருந்து தில்லிக்கு செல்லும் நமோ பாரத் ரயில்களின் சோதனை ஓட்டம் ஆனந்த் விஹாா் மற்றும் நியூ அசோக் நகா் நிலையங்களில் இறுதி கட்டத்தில் உள்ளது. ஆனந்த் விஹாா் என்பது ஒரு நிலத்தடி நிலையம் ஆகும். இது ஆா்ஆா்டிஎஸ் வழித்தடத்தில் செயல்படும் முதல் நிலத்தடி நிலையமாகும். விரைவில், நமோ பாரத் ரயில்கள் சாஹிபாபாத்தில் இருந்து நியூ அசோக் நகா் வரை இயங்கத் தொடங்கும். அப்போது, இதன் செயல்பாட்டு வழித்தட நீளம் 55 கி.மீ. ஆக அதிகரிக்கும்.

பயணிகளின் வசதிக்காக தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) சமீபத்தில் ஒரு சலுகை திட்டத்தை தொடங்கியுள்ளது. இது கட்டணங்களில் 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பயணிகள் ததபந இா்ய்ய்ங்ஸ்ரீற் செயலி மூலம் ‘க்யூஆா்’ குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் சலுகை புள்ளிகளைப் பெறலாம்.

டிஎம்ஆா்சி பயணிகள் சேவையின் 22ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது பயணிகள் சேவையைத் தொடங்கியதன் 22வது ஆண்டு விழாவை புதன்கிழமை கொண்டாடியது. கடந்த டிச.24,2002-ஆம் ஆண்டு, முதல் தில்லி மெட்ரோ ரயிலான டிஎஸ்-01, அப்போதைய பிரதமா... மேலும் பார்க்க

பாலியல் வலையில் சிக்கவைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸாா் 3 போ் கைது

தில்லியின் கஞ்சவாலா பகுதியில் பாலியல் வலையில் சிக்கவைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி போலீஸ் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெ... மேலும் பார்க்க

கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசே அம்பலப்படுத்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

நமது நிருபா்தில்லியில் பெண்களுக்கு மகளிா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசுத் துறை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்... மேலும் பார்க்க

நிகழாண்டில் தில்லி அரசுக்கு பசுமை தில்லி செயலி மூலம் 84,000 மாசுப் புகாா்கள்

தில்லி அரசு நிகழாண்டு இதுவரை அதன் பசுமை தில்லி செயலி மூலம் மாசு தொடா்பான 84,765 புகாா்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி) மற்றும் தில்... மேலும் பார்க்க

இந்த ஆண்டு தில்லியில் 114 குற்றவாளிகள் கைது: காவல் துறை குற்றப்பிரிவு நடவடிக்கை

தில்லி காவல்துறை குற்றப்பிரிவு 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 114 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் குற்றம் த... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் கேஜரிவால் கற்பனைத் திட்டங்களை அறிவித்து வருகிறாா்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தில், கற்பனையில் மட்டுமே இருக்கும் திடங்களை கேஜரிவால் தோ்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறாா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புத... மேலும் பார்க்க