எம்ஜிஆர் நினைவுநாளில் பவண் கல்யாண் சொன்ன விஷயம்..!
ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவண் கல்யாண் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரை அவரது நினைவுநாளான இன்று(டிச. 24) நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
பவண் கல்யாண் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களுக்கு என்னுடைய மரியாதையை உரித்தாக்குகிறேன். தமிழ் திரையுலகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் அவர். தன்னுடைய வாழ்க்கையை தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணித்தவர்.
தமிழ்நாடு மாநில மேம்பாட்டின் மீதான அன்னாரது ஒப்பில்லா ஈடுபாடும், ஈடு இணையற்ற தலைமைப் பண்பும் எனக்கு தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கிறது.
அன்னாரது சேவையும் அர்ப்பணிப்பும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.