செய்திகள் :

நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள்: மெக்டொனால்ட் நம்பிக்கை..!

post image

உஸ்மான் கவாஜா குறித்து நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள் என ஆஸி. தலைமைப் பயிற்சியாளார் மெக்டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. 4ஆவது போட்டி டிச.26இல் மெல்போர்னில் தொடங்குகிறது.

38 வயதாகும் கவாஜா 3 டெஸ்ட் போட்டிகளில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மிகவும் சுமாராகவே விளையாடிவரும் கவாஜா மீது ஆஸி. தலைமைப் பயிற்சியாளார் மெக்டொனால்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மெக்டொனால்ட் கூறியதாவது:

நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள்

உஸ்மான் கவாஜா நன்றாகவே இருக்கிறார். சமீபகாலமாக பேட்டிங் கடினமாகவே இருக்கிறது. அவரது பாணி தெளிவாக இருக்கிறது. அவரது தயாரிப்பு முறைகள் சரியாக இருக்கின்றன. நல்ல வீரர்கள் மீண்டும் ரன்களை குவிப்பார்கள். அடுத்த சில போட்டிகளில் அது நடக்கும்.

தொந்தரவு செய்யும் லபுஷேன்

லபுஷேனின் நோக்கம் சரியாக இருக்கிறது. அவர் சிறப்பாக இருக்கும்போது நாங்கள் சிறந்த சாதனைகளை வைத்துள்ளோம். அடிலெய்டில் பிஸியாக விளையாடினார். ஆடுகளத்தில் எதிரணியினருக்கு சிறிது தொந்தரவு தரும்படி ஆடுவார். பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் அதையே எதிர்பார்க்கிறோம்.

இரண்டு பக்கமும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்கள். இரண்டு பக்கமும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்தத் தொடரில் ஆடுகளமும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்றன.

இந்தியாவின் பக்கம் அச்சுருத்தும் வகையில் பேட்டிங் வரிசை இருக்கிறது. அடுத்த சில போட்டிகளில் அதில் சில மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஹேலி மேத்யூஸ் சதம் வீண்; ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வதோதராவில... மேலும் பார்க்க

தனக்குள் இருக்கும் சச்சினை கோலி வெளிக்கொணர்வார்..! ஹைடன் நம்பிக்கை!

மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் டிச.26இல் தொடங்குகிறது. விராட் கோலி சமீபகாலமாக அவுட்சைட்- ஆஃப் பந்தில் தொடர்ச்சி... மேலும் பார்க்க

அக்‌ஷர் படேலுக்கு ஆண் குழந்தை!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்‌ஷர் படேலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் தெரிவி... மேலும் பார்க்க

ஐசிசி யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி யு-19 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிரணி இன்று (டிசம்பர் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி... மேலும் பார்க்க

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள்!

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்... மேலும் பார்க்க

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெ... மேலும் பார்க்க