அக்ஷர் படேலுக்கு ஆண் குழந்தை!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்ஷர் படேலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!
அந்தப் பதிவுடன் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தை பெற்றோர் இருவரின் விரல்களையும் பிடித்துள்ளது தெரிகிறது. ஹக்ஷ் படேல் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை இந்திய அணியின் ஜெர்சியினை அணிந்துள்ளது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அஸ்வினுக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் குடும்பத்துடன் நேரம் செலவிடவுள்ளதாக பிசிசிஐ இடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, அஸ்வினுக்குப் பதிலாக அணியில் இளம் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டார்.