விழுப்புரம் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்ப...
தனக்குள் இருக்கும் சச்சினை கோலி வெளிக்கொணர்வார்..! ஹைடன் நம்பிக்கை!
மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 4ஆவது போட்டி மெல்போர்னில் டிச.26இல் தொடங்குகிறது.
விராட் கோலி சமீபகாலமாக அவுட்சைட்- ஆஃப் பந்தில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வருகிறார்.
சச்சின் 200-04 தொடரில் கவர் டிரைவ் ஆடாமல் விளையாடி அசத்தினார்.
பிரட் லீ, ஆண்டி பிகெல், ஜேசன் கில்லஸ்பி ஆகியோருக்கு எதிராக சச்சினின் தலைசிறந்த ஆட்டமாக 241 இன்னிங்ஸை ஹைடன் நினைவுக்கூரந்துள்ளார்.
இது குறித்து ஆஸி. முன்னாள் வீரர் கூறியதாவது:
மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்கலாம், தோல்வியாக இருந்திருக்கலாம், சுழல்பந்துக்கு சாதகமாக இருந்திருக்கலாம் - நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் விராட் கோலி பலவிதமான ஆடுகளங்களில் சதமடித்துள்ளார்.
ஆனால், மெல்போர்னில் அவருக்கு நல்ல பேட்டிங் ஃபிட்ச் தேவை. என்ன ஆனாலும் அவர் கிரீஸில் இருகப்பதற்கான வழியை கண்டறிய வேண்டும். அவுட்சைடு -ஆஃப் ஸ்டம்பு பிரச்னையை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.
தனக்குள் இருக்கும் சச்சினை கோலி வெளிக்கொணருவார்
கோலிக்கு நான் கூறுவது - பந்தின் வரிசைக்கு அவர் வர வேண்டும். சிறிது நேரம் களத்தில்படும்படி பந்தினை ஆட வேண்டும். கோலிக்கு நன்றாக கவர் டிரைவ் அடிக்க முடியும். ஆனால், சச்சின் ஒருநாள் முழுவதும் கவர் டிரைவ் ஆடாமல் இருந்திருக்கிறார். நான் கல்லி- பொசிசனில் நின்று எனது உதடுகளை பிதுக்கியிருக்கிறேன். அது ஒரு பிடிவாதமான பேட்டிங். எனக்கு அந்தநாள் முழுவதும் கேட்ச் வருமென தோன்றவில்லை. இருப்பினும் நான் அந்தத் தொடர் முழுவதும் போட்டியில் இருப்பதாக உணர்ந்தேன்.
சச்சின் தனது கவர் டிரைவ்வை தள்ளி வைத்து விளையாடினார். ஸ்பின்னர்களை அடித்தாடினார். எங்கு தேவையோ அங்கு விளையாடினார். நான் இருக்கும்போது எதுவும் நடக்காது எனக்கூறினார். விராட் கோலிக்கும் அந்த ஆளுமை இருக்கிறது. அதை மெல்போர்னில் விராட் கோலியிடம் எதிர்பார்க்கலாம் என்றார்.