செய்திகள் :

2024-25 நிதி ஆண்டில் வணிகவரித்துறை வருவாய் ரூ. 99,875 கோடி!

post image

வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் நேற்று (23.12.2024) வரை ரூ. 99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, தலைமையில் இன்று (24.12.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறைந்த வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டி பா. சுசிலா, ராசிபுரம் யு. கஸ்தூரி, மற்றும் திருவண்ணாமலை வி. விஜயலட்சுமி ஆகிய மூன்று நபர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம்) காசோலையை அமைச்சர் வழங்கினார்.

இதையும் படிக்க: அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் நேற்று (23.12.2024) வரை ரூ. 99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தகவல் தெரிவித்தார். 

மேலும் வரி வருவாய் வளர்ச்சியில் இந்திய அளவில் தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் முதன்மையாக விளங்குவதை சுட்டிகாட்டி வரும் மாதங்களில் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர்  பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் டி. ஜகந்நாதன், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் கைது!

சந்தியா திரையரங்கு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறையினர் வழ... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை(டிச. 25) சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியி... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

கோவையில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம்!

கோவையில் ரூ. 10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர... மேலும் பார்க்க

நிறைவடைந்தது மிஸ்டர் மனைவி தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி தொடர் நிறைவடைந்தது.வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் எ... மேலும் பார்க்க

பொறுமை, ஈகை, அன்பை விதைத்தவர் இயேசு: முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

தமிழக மக்களுக்கு கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியினை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி:கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற ... மேலும் பார்க்க