கோவையில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம்!
கோவையில் ரூ. 10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
கோவையில் ரூ. 10,740 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதல் விவரங்களை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிக்க: எம்ஜிஆர் நினைவுநாளில் பவண் கல்யாண் சொன்ன விஷயம்..!
ஒப்புதல் கிடைத்த 3 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்படும். மதுரையில் பூமிக்கு அடியில் ரயில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால், மதுரையைவிட கோவையில் பணிகள் விரைவாக நிறைவடையும்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஒருங்கிணைந்த திட்டமாக கோவையில் ரூ. 10,740 கோடியிலும், மதுரையில் ரூ. 11, 430 கோடி செலவிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
கோவையில் 2 வழித்தடங்களில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 16 ஹெக்டேர் நிலம் தேவை. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ஒப்புதல் கிடைத்ததும் அடுத்தடுத்தப் பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.