செய்திகள் :

நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

post image

பெங்களூருவில் இருந்து தில்லி சென்ற விமானத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட முன்னாள் ராணுவ வீரரை, அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்பட் இண்டிகோ நிறுவனத்தின் 6இ 6021 என்ற விமானத்தில் நடைபெற்றது.

உடல்நலம் பாதிக்கப்பட்டவரை மீண்டும் இயல்பு நிலைக்கு மருத்துவர் கொண்டு வந்ததால், அவசர தரையிறக்கம் தவிர்க்கப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய சண்டீகரின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனத்தின் பேராசிரியரும் மருத்துவருமான மொஹிந்திரா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

“பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சுமார் 45 நிமிடத்தில், மருத்துவர் யாரேனும் விமானத்தில் இருந்தால் பயணிக்கு உதவ முன்வருமாறு விமானக் குழுவினர் கேட்டனர்.

நான் உடனடியாக அவர்களை அணுகினேன். அந்த பயணி, அசௌகரியம், தலைவலி மற்றும் உடலின் இடது பக்கத்தில் பலவீனம் இருப்பதாக கூறினார்.

அவருக்கு ஏற்பட பலவீனமானது பக்கவாதத்தாலும் ஏற்படக் கூடியது என்பதால், மிக எச்சரிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர் நீரிழிவு நோயாளி என்றும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, ரத்த சக்கரை அளவு குறைந்திருக்கலாம் என்று சந்தேகித்தேன். அடுத்தகட்டமாக, வலிப்பு, சுயநினைவு இழப்பு போன்றவைக்கு வழிவகுக்கும் என்பதால், உடனடியாக தண்ணீரில் சக்கரை கலந்து கொடுக்குமாறு விமான ஊழியர்களிடம் தெரிவித்தேன்.

இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! டிரம்ப்

அதனை குடித்த 15 நிமிடங்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார், தில்லி விமான நிலையம் சென்றடையும் வரை அவரின் அருகிலேயே அமர்ந்தேன்.

அவரின் சொந்த ஊர் மைசூரு என்றும், தற்போது பெங்களூருவில் வசிப்பதாகவும் கூறினார். தில்லிக்கு அவரும் அவரது மனைவியும் ஒரு குழுவினருடன் சுற்றுலா சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அவரிடம் விரைவில் மருத்துவரை சந்தித்து மருந்துகளை மாற்றுமாறு அறிவுறுத்தினேன். ஒருவர் நீரிழிவு நோய்க்காக வழக்கமாக மருந்துகள் மற்றும் இன்சுலின் உட்கொண்டால் இத்தகைய நிலை ஏற்படலாம். ரத்தச் சர்க்கரைக் குறைவின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி நோயாளிகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார்.அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ... மேலும் பார்க்க

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!

பத்தனம்திட்டை : சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க அங்கி, மலை மேல் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமி விக்கிரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. திருவிதாங்கூர் அரச பரம்பரையால் ஐயப்ப சுவாமிக்கு ஆண்... மேலும் பார்க்க

1500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 4 பேர் பலி!

உத்தரகண்ட்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் விழுந்து 4 பேர் பலியாகினர்.உத்தரகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் இருந்து, பயணிகள் பேருந்து புதன்கிழமை (டிச. 25) மதியவேளையில் நைனிதல் மாவட்டம் ... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (டிச. 25) சந்தித்தார். அவருடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமாக ந... மேலும் பார்க்க

சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

ஹெலங்கெடி பகுதி கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா சென்றவர் பலியானார்.கோவா அருகே ஹெலங்கெடி பகுதி கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தின் எதிரே தீக்குளித்து தற்கொலை முயற்சி!

புது தில்லி: நாடாளுமன்ற கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள ரயில்வே பவனில் தீக்குளித்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இன்று(டிச. 25) மாலை நாடாளுமன்றத்தின் எதிரே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்... மேலும் பார்க்க